சென்னையில் இருந்து திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்கியது..!

திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு தமிழகத்தில் இருந்து ஆண்டுதோறும் இரண்டு மங்கலப்பொருட்கள் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம்.

  • ஒன்று ஸ்ரீவில்லிபுத்தார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலை.
  • மற்றொன்று ஏழுமலையான் கருடசேவைக்காக சென்னையில் இருந்து 150 ஆண்டுகளுக்கும் மேலாக சமர்ப்பிக்கப்பட்டு வரும் பாரம்பரியமிக்க வெண்பட்டு திருக்குடைகள்.

இந்த ஆண்டுக்கான திருக்குடை ஊர்வலம் சென்னை பூக்கடையில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடுகளுக்குப் பின் தொடங்கியது

ஊர்வலம் என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக சென்று மாலையில் யானைக்கவுனியை தாண்டுகிறது.

வரும் வியாழக் கிழமை திருப்பதி சென்றடையும் திருக்குடைகள், திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படும் திருக்குடை ஊர்வலம் செல்லும் இடமெல்லாம் மங்களம் பெருகி, வறுமையும் நோய் நொடியும் அகலும் என்பது நம்பிக்கை.

குடை ஊர்வலம் செல்லும் வழியெங்கும் மக்கள் கோவிந்தா முழக்கங்களுடன் தரிசனம் செய்தனர்.

திருக்குடை ஊர்வலத்தில் காணிக்கைகள் ஏற்கப்படாது என்றும், திருக்குடையின் மீது நாணயங்களை வீசுவதோ, காணிக்கை செலுத்துவதோ கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருக்குடை ஊர்வலத்தை முன்னிட்டு காவல்துறை, போக்குவரத்து காவல்துறை, மோப்ப நாய்கள் பிரிவு உள்ளிட்ட 300க்கும் மேபட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே