சிறுமியை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்பிரியா மீது வழக்குப்பதிவு

வீட்டில் வேலை செய்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக சென்னை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் நடிகை பானுப்பிரியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பிரபாவதி என்பவரின் மகள் சந்தியா, கடந்த ஜனவரி மாதம் வரை நடிகை பானுப்பிரியா வீட்டில் வேலை செய்து வந்ததாக தெரிகிறது. அப்போது அவரை நடிகை பானுப்பிரியா மற்றும் அவரது கணவர் கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து சிறுமியின் தாயார் ஆந்திராவில் இது தொடர்பாக புகார் அளித்தார். பானுப்பிரியா சென்னையில் வசிப்பதால் அந்த வழக்கின் கோப்பினை ஆந்திர போலீசார் சென்னை போலீசாருக்கு அனுப்பினர்.

அதன் அடிப்படையில் தற்போது சென்னை பாண்டிபஜார் போலீசார் நடிகை பானுப்பிரியா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே