சின்னத்திரை நட்சத்திரங்களுக்கு விருது வழங்கும் விழா

மும்பையில் பல்வேறு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நட்சத்திரங்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திரை மற்றும் சின்னத்திரையில் திறமையை காட்டிய நடிகைகள், இசையமைப்பாளர்களால் இந்த நிகழ்ச்சி களை கட்டியது.

நடிகைகள் ப்ரீதி ஜின்தா, பாயல் ரோஹட்கி, ராஷ்மி தேசாய், விக்ரமுடன் தமிழ்ப்படத்தில் நடித்த தொலைக்காட்சி நடிகை அனிதா ஹஸாநந்தானி , கரிஷ்மா தன்னா, மோனிகா சர்மா உட்பட ஏராளமான நட்சத்திரங்களுடன் இசையமைப்பாளர்கள் மன்மீத் மீத் , ஹர்மீத் மீத் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

மொபைலில் படம் எடுத்த ரசிகர்களுக்கும் புகைப்படக் கலைஞர்களுக்கும் நட்சத்திரங்கள் போஸ் கொடுத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே