சிந்து மாகாணம் பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற உதவுமாறு மோடிக்கு கோரிக்கை

பாகிஸ்தானிடம் இருந்து சிந்து மாகாணம் விடுதலை பெற உதவுமாறு, அமெரிக்க வாழ் சிந்து சமூக மக்கள் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெறும் ஹவுடி மோடி என்ற பிரம்மாண்டமான நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திரமோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் ஒன்றாக ஒரே மேடையில் தோன்றவுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் 50,000 பேர் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவில் வசிக்கும் சிந்தி சமூக மக்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

சிந்து மாகாணத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தும் அட்டூழியங்களில் இருந்து தங்களை விடுவிக்க உதவுமாறு, அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடிக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பாகிஸ்தானில் சிறுபான்மையினர் நசுக்கப்படுவதால், இந்த விவகாரத்தில் மோடியும், டிரம்பும் உதவுவார்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசத்திற்கு விடுதலை பெற்றுக் கொடுத்தது போல், சிந்தி மக்கள் விடுதலை பெறுவதற்கு இந்தியாவின் உதவி தேவை என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே