சர்வதேச தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

சர்வதேச தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு சென்னையில் மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது உலகம் முழுவதும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை சர்வதேச தாய்ப்பால் வாரம் கடைபிடிக்கப்படுகிறது அதனை முன்னிட்டு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி சார்பில் அதன் பயன்கள் மற்றும் முக்கியத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இதில் 300க்கும் மேற்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் செவிலியர்கள் மற்றும் ஏராளமான பேர் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் தொடங்கிய இந்த பேரணி திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனை அருகில் நிறைவடைந்தது.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 404 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே