சந்திராயன் 2 விண்கலத்திலிருந்து லேண்டர் விக்ரம் வெற்றிகரமாக பிரிந்தது

நிலவிலிருந்து குறைந்தபட்சமாக 119 கிலோ மீட்டர் அதிகபட்சமாக 127 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து சுற்றுப் பாதையில் சந்திராயன் 2 சுற்றி வருகிறது.

இந்நிலையில் சந்திராயன் 2 விண்கலத்திலிருந்து ஆய்வு ஊர்தி பிரக்யான் உடன் கூடிய லேண்டர் விக்ரம் இன்று மதியம் 1.10 மணிக்கு திட்டமிட்டபடி பிரிந்தது. இதன்மூலம் சந்திராயன் 2 வெற்றி பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல் கல் எட்டப்பட்டுள்ளது.

இனி லேண்டர் விக்ரம் நிலவை நோக்கி இறங்கி வரும் 7ஆம் தேதி காலை 9.30 மணியிலிருந்து இரண்டு மணிக்குள் நிலவில் தரையிறங்கும். லேண்டர் விக்ரம் நிலவில் இறங்கிய பின்னர் அதிலிருந்து பிரக்யான் ஆய்வு ஊர்தி வெளியேறி நிலவின் தரையில் ஆய்வு மேற்கொள்ளும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே