சதாப்தி, தேஜாஸ் ரயில்களில் 25 சதவீத கட்டணம் தள்ளுபடி

சதாப்தி,தேஜாஸ்,கேட்டிமன் ஆகிய ரயில்களில் 25 சதவீத கட்டண தள்ளுபடி செய்வதற்கு ரயில்வே துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயணிகள் கூட்டம் குறைவாக இருப்பதால் டிக்கெட் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. குளிர்சாதன இருக்கை வசதி, எக்ஸியூட்டிவ் இருக்கை வசதி ஆகியவற்றுக்கு அடிப்படை கட்டணத்தில் இந்த தள்ளுபடி அளிக்கப்படும்.

இருப்பினும் ஜிஎஸ்டி,முன்பதிவு கட்டணம், சூப்பர்பாஸ்ட் கட்டணம் உள்ளிட்டவை தனியாக விதிக்கப்படும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே