சென்னை தாம்பரத்தில் நடந்த பிகில் இசை வெளியீட்டு விழாவில் யாரை எங்கே வைக்க வேண்டும் என்று நடிகர் விஜய் சொன்ன குட்டிகதை, அரசியல் சர்ச்சைக்கு பிள்ளையார் சுழி போட்டது.

இந்த நிலையில் அந்த குட்டிக்கதை பட்டிமன்ற பெண் பேச்சாளர் கவிதா என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் ஆரணியில் நடந்த பட்டிமன்ற மேடையில் சொன்னது என்றும் அந்த கதையை ரசித்து கேட்டதால் அப்படியே அதனை உள்வாங்கிய நடிகர் விஜய் பிகில் மேடையில் தனது பாணியில் அதனை பேசியதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய்க்கு பெருமை சேர்த்த வெற்றிப்படங்கள் தெலுங்கு மற்றும் மலையாள படங்களை தழுவி உருவாக்கப்பட்டவை, அந்தவகையில் பட்டிமன்ற பேச்சாளர் கவிதாவின் கருத்தாளம் மிக்க பேச்சு அவரை கவர்ந்ததால், தனது மேடையில் அந்த கதையை சூழ்நிலைக்கு தக்கபடி விஜய் பயன்படுத்தியிருக்கலாம் என்கின்றனர் திரைஉலகினர்.

அதே நேரத்தில் பட்டிமன்ற பேச்சாளர் கவிதா கூறும் போது, தான் நடிகர் விஜயின் ரசிகை என்றும் அவர் தன்னிடம் கேட்டிருந்தால் இதைவிட பிரமாதமான குட்டிக்கதை ஒன்றை அவருக்காக எழுதிக் கொடுத்து இருப்பேன் என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே