தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்ட தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்ற பின்பு பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக முதன்முறையாக தமிழகம் வந்துள்ள அவர் காலையில் விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்தார்.
இதனைத்தொடர்ந்து தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு வந்த அவருக்கு பாஜக கட்சியினர் மற்றும் கோவில் நிர்வாகம் தரப்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்ட தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, கணவர் சொளந்தராஜன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் கோவிலில் சுவாமி தரிசனத்திற்காக சென்றார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.