கீழடியில் தொன்மையான பொருட்களை காண்பதற்காக குவியும் பொதுமக்கள்

கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட தொன்மையான பொருட்களை காண்பதற்காக  ஏராளமான பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 முதல் 2018 வரை 4 கட்டங்களாக நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் போது, சுமார் 2600 ஆண்டுகள் பழமையான தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

தொடர்ந்து ஜுன் மாதம் தொடங்கப்பட்ட 5ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள், இம்மாதத்துடன் நிறைவடைய இருந்த நிலையில் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுவரை,

  • சுடுமண் உருவங்கள்,
  • தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு,
  • சுடுமண் காதணி,
  • இரட்டை சுவர்,
  • நேர் சுவர்,
  • வட்டச் சுவர்,
  • நீர் வழிப்பாதை,
  • தண்ணீர் தொட்டி,
  • 7 அடுக்குகள் கொண்ட உறை கிணறு,
  • மண்பானைகள்,
  • பாசிமணிகள்,
  • பிராமி எழுத்து பொறித்த மண் பான்டங்கள் என

ஏராளமான தொண்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இவற்றை பள்ளி, கல்லூரி மாணவர்கள், எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் என நாள்தோறும்  ஆர்வமுடன் வந்து பார்த்து செல்கின்றனர்.

இந்நிலையில் விடுமுறை தினமான இன்றும் ஏராளமானோர் கீழடியில் அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடத்து வருகை தந்து அங்கு வைக்கப்பட்டுள்ள தொன்மையான பொருட்களை பார்த்து வியந்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே