தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் ஆதரவற்றோரின் இறுதி சடங்குக்காக கார் ஓட்டுநர் அளித்த உதவி தொகை அவரது இறுதிச் சடங்குக்கே பயன்பட்ட நிகழ்வு சுற்றுவட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுகிழமை ஆதரவற்றோரின் இறுதி சடங்குக்காக கார் ஓட்டுநரான விஜய், தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவி செய்துள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவவே விஜய் தனக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்திலும் பிரதிபலன் எதிர்பார்க்காமல் உதவி செய்ததற்கு பாராட்டுகள் குவிந்தன.
இந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை தண்டவாளத்தில் படுத்து விஜய் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.
ஆதரவற்ற தனது மரணத்துக்கு யாரும் காரணம் இல்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு விஜய் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், விஜய் கொடுத்த பணத்தை கொண்டே அவருக்கு இறுதி சடங்கு செய்துள்ளனர்.