ஒரு கிலோ சிக்கன் பிரியாணியை 9.5 நிமிடத்தில் சாப்பிட்ட இளைஞர்

ஈரோட்டில் நடைபெற்ற பிரியாணி சாப்பிடும் போட்டியில் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

ஈரோடு பெருந்துறை சாலையில் செயல்பட்டு வரும் உணவகம் பிரியாணி பிரியர்களை கவரும் வகையில் பிரியாணி சாப்பிடும் போட்டியை பேஸ்புக்கில் அறிவித்தது. போட்டியில் பங்கேற்க 500க்கும் மேற்பட்டோர் பதிவு செய்த நிலையில் 25 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.

ஒரு கிலோ சிக்கன் பிரியாணியை முதலில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி பெண்கள் உட்பட 25 பேர் போட்டியில் கலந்துகொண்டு பிரியாணியை சாப்பிட்டனர்.

ஒரு கிலோ பிரியாணியை ஒன்றரை நிமிடத்தில் சாப்பிட்டு பெருந்துறையைச் சேர்ந்த ராகுல் முதல் பரிசை தட்டிச் சென்றார். பரணிதரன் என்பவர் இரண்டாவது பரிசையும், ஜார்ஜ் மூன்றாவது பரிசையும் பெற்றுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே