ஐநா.மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்குமாறு மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

ஐநா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்குமாறு திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜெனிவாவில் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். இக்கூட்டத்தில் பங்கேற்க மு க ஸ்டாலின் அழைக்கப்பட்டுள்ளார். மனித உரிமை மீறல்கள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பங்கேற்றால் ஈழ தமிழர்களின் நிலை காஷ்மீர் சீர்திருத்தம் போன்ற பிரச்சினைகளை எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பை திமுக இன்னும் வெளியிடவில்லை.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே