எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் பொருளாதார நிலைமை மேம்படும்!

இன்றைய ராசிபலன்
02-08-2019 (ஞாயிற்றுக்கிழமை)
நல்ல நேரம்
காலை 6.15 முதல் 7.15 வரை
மாலை 3.15 முதல் 4.15 வரை
ராகு காலம்
மாலை 4.30 முதல் 6 வரை
எமகண்டம்
பிற்பகல் 12 முதல் 1.30 வரை

மேஷம்

எதிர்பாராத பணவரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். பேச்சில் பொறுமை அவசியம். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி கிட்டும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாக கிடைக்கும். இல்லாதரசிகள் மனதில் அவ்வப்போது லேசான சோர்வு ஏற்படும்.

ரிஷபம்

பணவரவுக்கு குறைவிருக்காது. கணவன் – மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். அரசாங்கக் காரியங்கள் முடிவதில் இழுபறி ஏற்படும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட கூடுதல் லாபம் கிடைக்கும். பொருளாதார நிலைமை சீராக இருப்பதால் பிரச்னை ஏற்படாது.

மிதுனம்

பொருளாதார நிலைமை மேம்படும். செலவுகளை கட்டுப்படுத்துங்கள். முடிந்தவரை கடன் வாங்குவதைத் தவிர்த்து விடுங்கள். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும்.

கடகம்

பொருளாதாரத்தில் சற்று தொய்வு ஏற்படலாம். கணவன் – மனைவிக்கிடையே ஒற்றுமை பலப்படும். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு இருக்காது. வீட்டிலேயே குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக வரும் . ஆனால் அதற்காக நீங்கள் கடினமாக உழைக்க வேண்டி வரும்.

சிம்மம்

குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும். தாயின் உடல்நலம் சீராகும். கணவன் – மனைவிக்குள் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி அன்யோன்யம்
ஏற்படும். பயணத்தின் போது எச்சரிக்கையாக இருங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது.

கன்னி

பொருளாதாரரீதியில் உச்சத்தை அடைவீர்கள். உறவினர்களிடம் பேசும் போது பக்குவம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே தகராறு ஏற்படலாம். நெருங்கிய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் முதலீடு செய்யாதீர்கள். பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வு ஏற்படும்.

துலாம்

உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். பணவரவு அதிகமானாலும் செலவுகளும் அதிகரிக்கும். குடும்ப விஷயத்தில் மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்காதீர்கள். பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். சக வியாபாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள்.

விருச்சிகம்

அதிர்ஷ்டத்தால் பணவரவு கிட்டும். திருமண வயதில் உள்ள ஆண் /பெண்ணின் திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். உங்கள் வாழ்க்கை துணையால் நல்ல காரியங்கள் ஈடேறும். வியாபாரிகள் தொழிலை மேம்படுத்துவீர்கள். பெண்களுக்கு பிறந்த வீட்டிலிருந்து தகுந்த நேரத்தில் உதவி கிடைக்கும்.

தனுசு

உங்களுக்கான வருமான திருப்திகரமாக இருக்கும். கணவன் – மனைவி ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வீட்டில் எளிமையான முறையில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. புகுந்த வீட்டில் உள்ள நபர்களுடன் மனக்கசப்பு ஏற்படலாம். ஆனால் அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

மகரம்

பொருளாதார நிலைமை ஓரளவு திருப்தியை கொடுக்கும். உறவினர்கள் வருகை வீட்டில் மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபாரத்தில் எந்த முக்கிய முடிவுகளையும் உடனே எடுத்து விடாதீர்கள். பெண்களுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது.

கும்பம்

பொருளாதார நிலைமை மேம்படும் என்பதால் சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படும். இன்று உங்களுக்கு உடல் அசதியும் மனச்சோர்வும் உண்டாகும். உறவினர்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரிகளை பொறுத்தவரையில் சக வியாபாரிகளிடையே இணக்கமான சூழல் ஏற்படும்.

மீனம்

பொருளாதார நிலைமை மனகவலையை தரும். ஆனால் அது நிரந்தமானது அல்ல. தாயாரின் உடல்நலனில் கவனம் தேவைப்படும். வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். இல்லரதரசிகள் முயற்சிக்கு கணவரின் ஆதரவு கிடைக்கும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே