உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் மேலும் ஒரு தங்கம்

உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை யஷஸ்வினி சிங் தேஸ்வால் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

ரியோடி ஜெனிரோவில் நடைபெற்று வரும் இப்போட்டியின் 10 மீட்டர் ஏர் பிஸ்டர் பிரிவில் 236.7 புள்ளிகளைப் பெற்று அவர் முதலிடம் பிடித்தார். உக்ரைன் வீராங்கனைக்கு வெள்ளிப் பதக்கமும், செர்பிய வீராங்கனைக்கு வெண்கலமும் கிடைத்தது.

இதேபோட்டியில், தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவிலும், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் அபிஷேக் வர்மாவும் தங்கம் வென்றுள்ளனர். ஐந்து பதக்கங்களுடன் இந்திய அணி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே