இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் மோடி சூளுரை

பெங்களூர் இஸ்ரோ மையத்தில் பிரதமர் மோடி உரை

பாரத மாதாவின் கனவுகளை நிறைவேற்ற பலர் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணம் செய்கின்றனர்

நேற்றிரவு உங்களுடைய மன நிலையை நான் புரிந்துக் கொண்டேன். உங்கள் கண்கள் பலவற்றை கூறின.

பல இரவுகளாக நீங்கள் தூங்கவில்லை என்று எனக்கு தெரியும் ஆனாலும் உங்களுடன் இன்று காலை மீண்டும் பேச விரும்பினேன்.

மிகுந்த நம்பிக்கையுடன் முன்னேறிய நிலையில் திடீரென எல்லாமே மறைந்துவிட்டது.

இந்த கணத்தை உங்களுடன் நானும் இருந்து அனுபவித்தேன். ஏன் நடந்தது எப்படி நடந்தது என்ற கேள்வி எழுந்தது.

ஒவ்வொரு கணப்பொழுதும் அதற்காக நீங்கள் உழைத்து முன்னே கொண்டு சென்றீர்கள்.

நமக்கு ஏற்பட்ட இடையூறுகளால் நமது இலக்கில் இருந்து நாம் விலக மாட்டோம்.

கவிஞர்கள் எழுதினால் நிலவைப் பற்றி நாம் எத்தனை ரொமாண்டிக்காக எண்ணியிருக்கிறோம் என எழுதுவார்கள். நிலவை கட்டியணைக்க நாம் சென்றோம். நிலவை கைப்பற்ற நினைத்திருந்தோம்.

கடந்த சில மணி நேரங்களில் நமது விஞ்ஞானிகள் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தினார்கள்.

நாம் மிகவும் நெருக்கமாக வந்தோம். ஆனால் இன்னும் எட்ட வேண்டியிருக்கிறது நமது விஞ்ஞானிகளின் உழைப்பு, உறுதியை நாம் மிகவும் போற்றுகிறோம்.

நம் நாட்டு மக்களுக்காக மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள மனிதர்களுக்காவும் இந்தியா சிந்திக்கிறது.

விண்வெளி திட்டங்களில் மிகச்சிறப்பானவை இனி வரும் காலங்களில் நிகழும்.

புதிய இடங்கள் கண்டுபிடிப்போம். புதிய இலக்குகளுக்கு செல்வோம்.

நமது விஞ்ஞானிகளுக்கு கூற விரும்புகிறேன்… இந்தியா உங்களுக்கு துணை நிற்கும்.

இந்தியாவின் வளர்ச்சிக்காக ஈடு இணையற்ற உழைப்பை நீங்கள் தந்துக் கொண்டிருக்கிறீர்கள்.

நீங்கள் வெண்ணை மீது நடப்பவர்கள் அல்ல பாறைகள் மீது நடப்பவர்கள்.

உங்களால் முடிந்த அளவுக்கு நிலாவை நெருங்கினீர்கள்.

விஞ்ஞானிகளின் குடும்பத்தினருக்கும் நன்றி கூற விரும்புகிறேன்.

ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாற்றில் நம்மை சோர்வடைய செய்யும் தருணங்கள் உள்ளன. ஆனால் நாம் மீண்டும் எழுச்சி பெற்றிருக்கிறோம். இதுதான் நமது நாகரீக உலகை வளர்த்து வந்துள்ளது.

பெருமையுடன் கூறுகிறேன். உங்கள் முயற்சிகள் மிகச்சிறப்பானவை. நமது விஞ்ஞான குழுவினர் கடுமையாக உழைத்தனர்.

இன்று நாம் கற்றுக் கொண்ட பாடம் நமது எதிர்கால பயணங்களை உறுதி செய்யும் எப்போதும் தோல்வியை ஒப்புக் கொள்ளாத வெற்றிப் பயணம் இது.

உங்களை எண்ணி நாடே பெருமைப்படுகிறது.

நான் உங்களுடன் இருப்பேன். நாடும் உங்களுக்கு துணையாக இருக்கும்.

எந்த ஒரு இடையூறும் சங்கடமும் நமக்கு புதிதாக ஒன்றை கற்றுக் கொடுக்கிறது.

சந்திரயான் 2 பயணத்தின் இறுதி கட்டம் நமக்கு வேதனையை கொடுத்திருக்கலாம். ஆனாலும் அதன் பயணம் நமக்கு பெருமிதத்தை கொடுத்துள்ளது.

இப்போதும் கூட நமது ஆர்பிட்டர் சந்திரனை சுற்றி வந்துக் கொண்டிருக்கிறது. 

இந்தியா உலக நாடுகளில் விண்வெளி திட்டங்களில் முன்னணியில் உள்ள நாடு.

உங்கள் உழைப்பால்தான் செவ்வாய் கிரகத்தை நாம் எட்ட முடிந்தது.

சந்திரயான் தான் முதன் முதலில் நிலவில் நீர் இருப்பதை உலகிற்கு சொன்னது.

ஒரே நேரத்தில் 100 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியும் சாதித்தோம்.

எந்த வித தடையும் நிராசையும் தேவையில்லை. முன்னேற வழி காண்போம்.

இனி வரும் திட்டங்களுக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்

விஞ்ஞானத்தின் அடிப்படையே முயற்சி, முயற்சி மேலும் முயற்சிதான்.

உங்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. உங்கள் எண்ணங்களை நான் அறிவேன்.

உங்களிடமிருந்து உறுதியைப் பெற்றுக் கொள்வதற்காகவே நான் இங்கு வந்திருக்கிறேன்.

இத்தனை திறன் வாய்ந்த விஞ்ஞானிகளுக்கு நல்வாழ்த்துகள் தெரிவிக்கிறேன்.

இந்தியாவிற்கு புதிய விடியல் இருப்பதால் யாரும் சோர்ந்துவிடாமல் பணிகளை தொடர வேண்டும் என்று மோடி குறிப்பிட்டார். மோடி பேசி முடித்தவுடன் இஸ்ரோவின் செயற்கைக்கோள் கட்டுப்பாட்டு அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி உற்சாகமாகினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே