இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப்பட்ட 7 தமிழக மீனவர்கள் விடுதலை

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

ராமேஸ்வரத்தை சேர்ந்த ஏழு மீனவர்களை இலங்கை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் விடுவித்து தீர்ப்பு அளித்தது.

கடந்த 13ம் தேதி நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து யாழ்பாணம் சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த விசைப்பலகையும் பரிந்துரை செய்தனர். இந்த நிலையில் மீனவர்கள் வழக்கை இன்று விசாரித்த ஊர்காவல் துறை நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் எதிர் காலங்களில் இலங்கை கடற்பகுதிக்குள் வரக்கூடாது என ஏழு மீனவர்களை எச்சரித்து விடுதலை செய்தார்.

மேலும் விசைப்படகிற்கான உரிய ஆவணங்களுடன் வரும் அக்டோபர் மாதம் 29-ம் தேதிக்கு படகின் உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் படகு அரசுடமை ஆக்கப்படும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே