மத்திய அரசின் Institute Of Eminence என்ற சிறப்பு அந்தஸ்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு, தமிழக அரசு தனது பங்கீடு நிதி தொகையை வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
இந்தியாவின் 10 சிறந்த பல்கலைக்கழகங்களை தேர்வு செய்து, Institute Of Eminence என்ற சிறப்பு அந்தஸ்தை மத்திய அண்மையில் அறிவித்தது.
ஐஓஇ என்ற அந்தஸ்தை பெறவுள்ள இப்பல்கலைக்கழகங்கள் தங்களது உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி கொள்ள, மாநில அரசு பங்களிப்புடன் தலா 1000 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு வழங்கவுள்ளது.
அதன்படி மத்திய அரசு 750 கோடி ரூபாயும், மாநில அரசு 250 கோடி ரூபாயும் இதற்கு நிதியாக வழங்க வேண்டும் என அண்மையில் மத்திய அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழகம் இந்த அந்தஸ்தினை பெற, தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், துறை செயலாளர் மங்கத்ராம் ஷர்மா, பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.