இந்தியன் புல்ஸ் பங்குகள் சரிந்தன

வங்கிகள் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகள் குறித்த எதிர்மறையான செய்திகளால் நேற்று மாலை இந்திய பங்குச் சந்தைகளில் கடும்வீழ்ச்சி காணப்பட்டது. இந்தியன்புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகளில் 34 சதவீத சரிவு காணப்பட்டது.

  • தேசிய பங்குச்சந்தை சரிவுடன் நேற்று மாலை 11 ஆயிரத்து 474 புள்ளிகளுடன் நிறைவடைந்தது.
  • மும்பை பங்குச் சந்தையும் 38 ஆயிரத்து 667 புள்ளிகளில் நிறைவடைந்தது.
  • யெஸ்பேங்க் பங்குகள் 15 சதவீதம் சரிந்து காணப்பட்டன.

இந்தியன்புல்ஸ் நிறுவத்தின் முறைகேடுகள் குறித்த செய்திகளால் அதன் பங்குகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்தியன்புல்சுடன் இணைய உள்ள லஷ்மி விலாஸ் வங்கியின் மீது ரிசர்வ் வங்கி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதையடுத்து அதன் பங்குகளும் 5 சதவீதம் சரிந்தன.

பஞ்சாப் மகாராஷ்ட்ரா கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த ஊடகத் தகவல்களையடுத்து, அதில் பெருந்தொகை கடன்பெற்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் நலிவடைந்த நிலையில் இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.

இதனால் முன்னணி ரியல் எஸ்டேட் துறையினர் 50சதவீத விளம்பர செலவுகளைக் குறைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே