ஆள்மாறாட்டம் விவகாரம்- “விசாரணைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்”

தேர்வுகளில் முறைகேடுகளை தவிர்க்க மாணவர்களின் கைரேகையும் அடையாளமாக பயன்படுத்தப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்துள்ளார்.

சென்னையை சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக வெளியான புகாரில் உரிய விசாரணைக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முறைகேடுகளை தவிர்க்கும் விதமாக எதிர்காலங்களில் மாணவர்களின் பெருவிரல் ரேகையும், அவர்களின் அடையாளமாக பயன்படுத்தப்படும் என்று நாராயணபாபு கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே