அடுத்த பருவத்தேர்வு முதல் அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆன்லைன் முறையில் தேர்வுத் தாள்கள் திருத்தப்படும் என்று அதன் துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கியபின் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணா பல்கலைக்கழத்தை, மத்திய அரசு சீர்மிகு பல்கலைக் கழகமாக அறிவித்துள்ளதாகத் தெரிவித்தார்.
அதற்கு உரிய நிதியை மாநில அரசு வழங்க வேண்டும் என சூரப்பா கேட்டுக் கொண்டார். தமது அமெரிக்க பயணத்தின் போது அங்கு உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களுடன் இணைந்து செயல்படுவது குறித்து பேசி இருப்பதாகவும், விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்த பருவத்தேர்வு முதல் அண்ணா பல்கலைகழகத்தில் ஆன்லைன் முறையில் தேர்வு தாள்கள் திருத்தப்படும் என்றும் சூரப்பா தெரிவித்தார்.