ஆகஸ்ட் மாதத்திலும் தொடரும் வாகன விற்பனை சரிவு!

இந்தியாவில் வாகன விற்பனை வீழ்ச்சி ஆகஸ்ட் மாதத்திலும் தொடர்கதையாகி உள்ளது, புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.

இந்திய வாகன உற்பத்தியாளர்கள் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் இது தெரியவந்துள்ளது. நாட்டின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி ஆகஸ்டில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 413 கார்கள் விற்றுள்ளதாக மாருதி தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டு ஆகஸ்ட் விற்பனையை விட 32.7 விழுக்காடு குறைவு என மாருதி கூறியுள்ளது.

ஹோண்டா நிறுவனம் தனது கார்கள் விற்பனை ஆகஸ்டில் 17020 ஆக குறைந்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டு ஆகஸ்ட் விற்பனையை விட 51 விழுக்காடு குறைவு என்றும் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் – இல் டொயோட்டா காரின் விற்பனை 21 விழுக்காடு குறைந்து 11544 ஆகி உள்ளது. இதேபோல மஹிந்திரா நிறுவனம் 25 சதவீத விற்பனை குறைந்துள்ளதாக கூறியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே