இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் – பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவிப்பு..!!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்புக்கு +2 மதிப்பெண் வெளியான 15 நாட்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கடந்த ஓராண்டுக்கு மேலாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன. அத்துடன் மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறது. அதேபோல் பல்வேறு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை படிப்புக்காக விண்ணப்பிக்க அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று பாரதிதாசன் பல்கலை. பதிவாளர் கோபிநாத் தெரிவித்துள்ளார்.

இளநிலை படிப்புக்கு +2 மதிப்பெண் வெளியான 15 நாட்களில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் பல்கலை. தெரிவித்துள்ளது.

முதுநிலை, டிப்ளமோ படிப்புக்களில் சேர வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் www.bdu.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம் என்றும் பாரதிதாசன் பல்கலை. அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே