கோவிட்- 19 பாதிப்பில் இறப்புகள் குறைந்தாலும் மறுபடியும் கோவிட் 19 தொற்று ஏற்படுமா?

கோவிட் 19 உலகமெங்கும் பரவி வருகின்ற சமயத்தில் அதன் இறப்பு விகிதம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இறப்பு விகிதம் குறைந்தாலும் அது மறுபடியும் வருகின்ற வாய்ப்புகள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகமெங்கும் கோவிட்-19 யை எப்படி கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பது தெரியாமல் எல்லா நாடுகளும் திண்டாடி வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் ஒரு பக்கம் கோவிட் 19 தொற்றுக்களால் ஏற்படும் இறப்பின் சதவீதம் குறைந்துள்ளது. அதே சமயத்தில் ஆய்வாளர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால் கோவிட் 19 இறப்பின் சதவீதம் குறைந்தாலும் கொரோனா தொற்று மறுபடியும் மக்களை தாக்கும் அபாயம் அதிகமாக உள்ளது.
சில மாநிலங்களில் லாக்டவுன் தளர்வுகளை தளர்த்துவதும் போடுவதுமாக இருந்தும் கூட இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஏப்ரல் மாதத்தில் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது. ஜூன் மாதத்தில் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை உச்சத்தை அடைய ஆரம்பித்தது. அதே நேரத்தில் தினசரி கோவிட் 19 இறப்புகள் தற்போது குறைந்து விட்டன. ஆனால் மறுபடியும் ஒரு நாளைக்கு இறப்புகளின் எண்ணிக்கை சீராக உயரத் தொடங்கியது.

இறப்பு எண்ணிக்கை ஆரம்பத்தில் ஏன் குறைவானது என்பதை விளக்க சில காரணிகளை பொது சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டி உள்ளது. சிகச்சை மேம்பாடு, பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவை இறப்புகளின் எண்ணிக்கையை குறைவாக்கி உள்ளது.
கூடுதலாக கொரோனா சோதனையை மேற்கொண்ட போது வழக்குகள் நிறைய பிடிபட்டன. சோதனைகளை மிகக் குறைவாக எடுத்த போது நோயறிதலுக்கும் இறப்புக்கும் இடையிலான பின்னடைவு மார்ச் மாதத்தை விட நீண்டதாக இருந்தது.
புதிய இறப்புகளின் எண்ணிக்கை உயரத் தொடங்கியதால் பின்னடைவு 2 வாரங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்திருக்கலாம். ஆரம்பத்தில் மீண்டும் லாக்டவுனை தளர்த்தி திறக்கப்பட்ட மாநிலங்கள் மீண்டும் மிகப்பெரிய பாதிப்பை காட்டுகின்றன. நாட்டின் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நகரமான நியூயார்க் ஜூன் 1 முதல் 64% வீழ்ச்சியைக் கண்டது.

கடந்த வாரத்தில் புதிய இறப்புகளின் வளர்ச்சி விகிதம் குறைவாக இருந்தாலும் சமீபத்திய இறப்புகளின் அதிகரிப்பு தொடரக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறப்புகளின் கூர்மையான அதிகரிப்பு காணும் பெரும்பாலான மாநிலங்களில் நாட்டின் மிக உயர்ந்த நேர்மறையான சோதனை விகிதங்களும், மருத்துவனையில் சேர்க்கும் விகிதங்களும் அதிகரித்து உள்ளன. இது இன்னும் பல குடியிருப்பாளர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருக்க கூடும் என்பதற்கான அறிகுறியாகும்.
நேர்மறையான சோதனைகளின் அதிக பங்கு பெரும்பாலும் ஒரு மாநிலத்தின் அதிகாரப்பூர்வ எண்களின் தொற்றுநோய்கள் கண்டறியப்படாமல் போகும் மக்கள் இருப்பதைக் காட்டுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே