கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் பெறுவது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது என உயர்நீதிமன்றம் கிளை கருத்து தெரிவித்துள்ளது.
தமிழக அரசு நிர்ணயித்துள்ள விலை நிர்ணயபடி தனியார் மருத்துவமனைகள் கட்டணம் வசூலிக்கின்றனவா? என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தனியார் மருத்துவமனைகள், கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் பெறுவது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது என்றும் இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் பெறுவதை முறைப்படுத்த முன்வர வேண்டும் என்றும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் விவரம் குறித்து வெளிப்படைத்தன்மை தேவை எனவும் கூறியுள்ளது.
மேலும் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் குறித்த விவரங்கள் வெளிப்படையாக இருந்தால் மக்களுக்கு அது உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளது.