சமீப காலமாகவே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதாக குறைந்த கலோரிகளை கொண்ட உணவுகளை பலரும் சாப்பிட்டு வருகிறார்கள்.

இது உடல் பருமனுக்கு முக்கிய காரணியாக அமைகிறது. அதிக கலோரிகள் இருக்கும் கொழுப்பு உணவுகளை சாப்பிட்டால் மட்டுமே உடல் பருமன் அதிகரிக்கும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. இதில் இருக்கும் சர்க்கரை அளவு பற்றி பலரும் கருத்தில் கொள்வதில்லை.

சர்க்கரையை நமது உணவில் இருந்து முற்றிலும் தவிர்ப்பது சாத்தியமே இல்லாதது. குறைந்த கலோரி கொண்டவை செயற்கை இனிப்புகள் (SugarFreeSweets) என்று அழைக்கப்படுகிறது.

பலரும் இந்த சுகர் ஃப்ரீ ஸ்வீட்சை சாப்பிட ஆர்வமாக இருக்கின்றனர்.

இது சர்க்கரையை போல இனிப்பு சுவையை அளிக்கும். இது குறித்த பல்வேறு கட்டுக்கதைகள் மக்களிடையே உலாவி வருகிறது அதன் உண்மை தன்மை குறித்து காணலாம்.

சர்க்கரை இல்லாத அனைத்து உணவுகளும் சமமாக உருவாக்கப்படுவது இல்லை. அதில் வெவ்வேறு ரசாயனங்கள் சர்க்கரை இல்லாத உணவுகளில் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது.

ஒவ்வொன்றும் வெப்பநிலையில் எதிர்வினை புரியும் என்பதால், அதற்கேற்ப பொருட்களை தயார் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுகிறது. சுக்ரோஸ் அதிக வெப்பநிலையிலும் பயன்படுத்தக் கூடியது எனபதால், அதனை சூடான டீ, காபி & குளிர்ந்த பொருட்களோடு பயன்படுத்தலாம்.

சுக்ரோஸ் மற்றும் ஸ்டீவியா இனிப்புகள் உட்கொள்வதற்கு பாதுகாப்பானது என்றாலும், குழந்தைகளுக்கு ஸ்டீவியா மட்டுமே பரிந்துரைக்கப்படும்.

சர்க்கரை இல்லாத இனிப்புகளில் தனித்துவமான ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது. இது வெள்ளை சர்க்கரையை விட இன்னொரு 250 மடங்கு முதல் 500 மடங்கு வரை இனிப்புகளை கொண்டுள்ளது.

இந்த இனிப்புகளின் தன்மை மருத்துவ ரீதியாகவும் நிறுவனம் செய்யப்பட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட சுகர் பிரீ இனிப்பு வகைகள் கல்லீரலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

சர்க்கரை இல்லாத பொருட்களால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கவே இயலாது என்பது முற்றிலும் தவறான ஒரு தகவலாகும். இந்த பொருட்களை தயாரிக்க முதலில் 20 முதல் 25 விழுக்காடு இனிப்புகள் சேர்க்கப்படுகிறது.

சோயா பீன்ஸ், பால் பவுடர், பால் பொருட்கள் பயன்படுத்தி சர்க்கரை இல்லாத உணவு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில் பயன்படுத்தப்படும் இனிப்புகள் குறைந்த அளவு கலோரிகள் கொண்டவை ஆகும்.

அதனால் அவைகளில் சர்க்கரை இல்லை என்று கூறிவிட முடியாது. அதில் குறைந்த அளவு கலோரிகள் கட்டாயம் இருக்கும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே