ஜூலை 1 ஆம் தேதி மருத்துவர்கள் தினம் : அரசு விடுமுறை தினமாக அறிவித்தார் மம்தா பானர்ஜி

தேசிய மருத்துவர்கள் தினமான ஜூலை 1 ஆம் தேதியை அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்படுவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

நாடு முழுவதும் தன்னலம் கருதாது சேவையாற்றி வரும் மருத்துவர்களை கௌரவிக்கும் வகையில் ஜூலை 1 ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்குவங்க மாநிலத்தில் ஜூலை 1 ஆம் தேதி மருத்துவர்கள் தினமாக கடைபிடிக்கப்படும். அன்றைய தினம் அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

மேலும், கரோனா முன்களப் பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் ஜூலை 1 ஆம் தேதியை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேற்குவங்கத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரரும், தலைசிறந்த மருத்துவரும், அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான டாக்டர் பிதான் சந்திர ராய், அவரது பிறந்த தினம் மற்றும் நினைவு தினமான ஜூலை 1 ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே