Vijay புள்ளிங்கோலாம் ஓடியாங்க: மாஸ்டர் பற்றி சூப்பர் அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்.

மாஸ்டர் படம் குறித்து முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
கார்த்தியை வைத்து கைதி படத்தை எடுத்து முடித்த கையோடு விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ் உள்ளிட்டோரை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தை கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததால் மாஸ்டரின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் பிறந்தநாள் அன்று மாஸ்டர் ட்ரெய்லரை வெளியிட வேண்டும் என்று ரசிகர்கள் அன்புக் கோரிக்கை விடுத்தார்கள். ஆனால் ட்ரெய்லர் வெளியிடப்படவில்லை. இருப்பினும் மாஸ்டர் படம் பற்றி ஏதாவது அப்டேட் வெளியாகுமா என்கிற எதிர்பார்ப்பில் உள்ளனர் விஜய் ரசிகர்கள்.

இந்நிலையில் மாஸ்டர் பற்றி லோகேஷ் கனகராஜ் கூறியிருப்பதாவது,

மாஸ்டர் படம் சிறப்பாக வந்திருக்கிறது. போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளின்போது நான் மாஸ்டர் படத்தை 10 முறை பார்த்துவிட்டேன். ஒவ்வொரு முறை பார்க்கும்போது இது தான் முதல் முறை பார்ப்பது போன்று ஒரு உணர்வு ஏற்பட்டது.

மாஸ்டர் விஜய், விஜய் சேதுபதி ஆகியோரின் ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்றார்.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். அந்த படத்தில் தான் கொடூரமானவனாக, துளி கூட நல்லவன் இல்லாத கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக விஜய் சேதுபதி அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
மாஸ்டர் பட ஷூட்டிங் நடந்தபோது விஜய் கேட்டதால் அவரை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டார் விஜய் சேதுபதி. இதையடுத்து மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் விஜய் சேதுபதியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். விஜய் கொடுத்த அந்த முத்தம் தங்களுக்கு இடையேயான ஆழமான நட்பின் அடையாளம் என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

படத்தில் தான் விஜய்யும், விஜய் சேதுபதியும் மோதிக் கொண்டார்களே தவிர நிஜத்தில் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர். மாஸ்டர் படத்தை அடுத்து விஜய் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவிருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் என்று கூறப்படுகிறது.

தளபதி 65 படத்திற்காக விஜய்க்கு ரூ. 100 கோடி சம்பளம் பேசப்பட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சனையால் திரையுலகம் முடங்கிப் போயுள்ளதையடுத்து விஜய் தன் சம்பளத்தை ரூ. 20 கோடி குறைத்துக் கொண்டாராம். ஆனால் சம்பளத்தை மேலும் குறைக்க வேண்டும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் விஜய்யிடம் கூறியுள்ளதாக செய்திகள் வெளியானது.
மேலும் தளபதி 65 படத்தின் பட்ஜெட்டை சன் பிக்சர்ஸ் நிறுவனம் குறைத்துள்ளதாம். சன் பிக்சர்ஸ் ஒத்து வரவில்லை என்றால் தளபதி 65 படத்தை தேனாண்டாள் நிறுவனத்துடன் சேர்ந்து பண்ணுவது என்று விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தளபதி 65 படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடிக்க 80களில் வெற்றிகரமான ஹீரோவாக வலம் வந்த மைக் மோகனிடம் முருகதாஸ் கேட்டாராம். அதற்கு மோகனோ, விஜய்க்கு அப்பாவாக நடிக்கும் அளவுக்கு ஒன்றும் எனக்கு வயதாகிவிடவில்லை. உங்கள் படத்தில் நடிக்க முடியாது என்று கோபமாக கூறிவிட்டாராம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே