வேல்யாத்திரைக்கு தடை விதித்த தமிழக டிஜிபியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக அவசர மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் நவம்பர் 6 முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை வேல் யாத்திரை நடத்தப்பட இருந்தது.

அதன்படி திருத்தணியில் ஆரம்பிக்கப்பட இருந்த வேல் யாத்திரை இறுதியாக 6ம் தேதி திருச்செந்தூரில் முடியவிருந்தது.

ஆனால் கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு வேல் யாத்திரைக்கு அனுமதி தர மறுத்தது. இருப்பினும் தடையே மீறி வேல் யாத்திரை நடத்திட பாஜக திட்டமிட்டது.

இதையடுத்து நேற்று சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து வேலுடன் திருத்தணிக்கு புறப்பட்டு சென்ற தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் திருத்தணியில் தடையை மீறி தொடங்கிய பாஜகவின் வேல் யாத்திரையை போலீசார் தடுத்து நிறுத்தினர். வேல் யாத்திரையை தொடங்கிய மாநில தலைவர் எல்.முருகனை போலீசார் கைது செய்தனர். அவருடன் பங்கேற்ற அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் வேல்யாத்திரைக்கு தடை விதித்த தமிழக டிஜிபியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக அவசர மனு தாக்கல் செய்துள்ளது.

இன்று மாலை இந்த அவரச மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றம் நடைபெறுகிறது.

இதனிடையே, தமிழகத்தில் திட்டமிட்டபடி வேல்யாத்திரை நடைபெறும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாகவே, தமிழக அரசு வேல்யாத்திரைக்கு அனுமதியளிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே