திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.

ஆளூர் ஷாநவாஸ் நாகப்பட்டினம் தொகுதியிலும், வானூர் தொகுதியில் வன்னியரசும் களம் காண்கின்றனர்.

தமிழக தேர்தல் களம் மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. திமுக கூட்டணியில் ஏறக்குறைய அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டன.

அதிமுக கூட்டணியில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டன.

திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இந்த நிலையில் அந்த 6 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.

அந்த பட்டியல் பின்வருமாறு:-

  • திருப்போரூர்- எஸ். எஸ். பாலாஜி,
  • நாகப்பட்டினம் – ஆளூர் ஷாநவாஸ்,
  • காட்டுமன்னார்கோவில்- சிந்தனைச் செல்வன்,
  • அரக்கோணம்- கௌதம சன்னா,
  • வானூர்- வன்னியரசு,
  • செய்யூர்- பனையூர் பாபு ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே