இன்றைய ராசி பலன்கள் (06 ஆகஸ்ட் 2020) – ரிஷபம், சிம்மம் ராசிகாரர்களுக்கு இன்று அற்புதமான நாள்…!!

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கும் விவரங்கள் பின்வருமாறு:

மேஷம்

ராசிக்கு இன்று உடல் நலம் சிறப்பாக இருக்கும். உடல் உழைப்பு அதிகம் தேவைப்படக் கூடிய நாள். தொழிலில் மகிழ்ச்சியான அனுபவங்களை அனுபவிப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் சக பணியாளர்களின் ஒத்துழைப்பைப் பெறுவது கடினம். சொல் செயலில் கவனமும், பொறுமையும் தேவை.

திருமண வாழ்வில் உங்கள் துணை உங்களை புரிந்து கொள்வார். காதலில் ஆக்கப்பூர்வமான உறவு நீடிக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும். பயனுள்ள வகையிலும், சுப செலவுகளும் ஏற்படும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். ஒரு புதிய வருமான ஆதாரம் கிடைக்க வாய்ப்புள்ளது.

ரிஷபம்

நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு எண்ணம் அதிகரிக்கும். நாளைய திட்டங்கள் குறித்து இன்றே முடிவெடுப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.

வேலையில் உங்களின் திறமையை வெளிப்படுத்தி நற்பெயர் பெறுவதோடு, புதிய வாய்ப்புக்களைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. முக்கிய முடிவுகளை எளிதாக எடுப்பீர்கள். அதனால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

மிதுனம்

ராசிக்கு எதிர்மறை எண்ணங்கள் தோன்ற வாய்ப்புள்ளது. அதனால் எந்த ஒரு முடிவை எடுத்தாலும் கவனம் தேவை. முடிந்தால் முக்கிய முடிவுகளை எடுக்காமல் தள்ளி வைப்பது அவசியம்.

நிதி நிலைமை சற்று கவனமுடன் இருப்பது நல்லது. திடீர் செலவு அல்லது தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு வயிறு சார்ந்த கோளாறு ஏற்படக்கூடும். உடல் நலனில் கவனம் தேவை. வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி இருக்கும். சமூகத்திலும், குடும்பத்திலும் உங்கள் மீதான மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

கடகம்

உங்கள் ராசிக்கு இன்றும் சந்திராஷ்டமம் உள்ளதால் எந்த செயலைச் செய்வதில் கவனம் தேவை. வாய்ப்புக்களை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொள்வது அவசியம். பொறுமையுடன் எதையும் அணுகுவதால் வெற்றி கிடைக்கும்.

பணிச் சூழல் சற்று சாதகமற்றதாக இருக்கும். பணிச்சுமை கூடுதலாக இருக்கும் என்பதால் வேலையை திட்டமிட்டுக் கொள்வது அவசியம். சிலருக்கு தொடை வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. காதலில் கடுமையான சொற்களை தவிர்ப்பது அவசியம்.

சிம்மம்

ராசிக்கு இன்று அற்புதமான நாளாக இருக்கும். தொழிலில் உங்கள் பங்குதாரர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். தொழில் விஷயமாக பயணங்கள் செல்ல நேரிடும். வேலையில் சக பணியாளர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பணியில் நற்பெயரைப் பெறுவீர்கள்.

பண வரவு சிறப்பாகவும், அதை பயனுள்ள வகையில் செலவழிப்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அன்பும், அரவணைப்பும் சிறப்பாக இருக்கும்.

கன்னி

இன்று தொழிலில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். இருப்பினும் புத்துணர்வுடன் வேலையை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புக்கள் பெறுவீர்கள். நேர்மறையான எண்ணங்களால் வளர்ச்சி உண்டாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பண வரவு சீராகவும், குடும்பத்திற்கு தேவையான செலவை செய்வீர்கள். துணையுடன் இருந்த கருத்து மோதல் நீங்கி அன்பு அதிகரிக்கும்.

துலாம்

இன்று குழந்தைகளுடன் வீட்டில் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்புள்ளது. குழந்தைகளின் கல்வியைப் பொறுத்தவரை சில நல்ல செய்திகளை நீங்கள் பெறமுடியும். சமூகத்தில் உங்கள் மீதான மதிப்பு உயரும்.

வீடு அல்லது அலுவலகத்திற்கு சில தேவையான பொருட்களை வாங்கலாம். பொருட்களை வாங்கும்போது செலவில் சற்று கவனமாக இருப்பதும் அவசியம். இராணுவம், மேலாண்மை, மின்னணுவியல், மருத்துவம் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு மிகவும் சிறப்பான பலன் கிடைக்கும்.

விருச்சிகம்:

இன்று நீங்கள் சில அதிருப்திகளை சந்திக்கக் கூடும். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களுடன் ஒத்துழைப்பு நல்க மாட்டார்கள், எனவே பொறுமை காப்பது அவசியம். எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடுவதற்கு முன்பு ஆவணங்களைக் கவனமாக படிக்கவும் அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அவசியமான செலவுகளைத் தவிர புதிய முதலீடுகளைச் செய்வதை கண்டிப்பாக தவிர்க்கவும். மாணவர்கள் தங்கள் பாடங்களைப் பொறுமையுடன் படிக்க வேண்டியது அவசியம்.

தனுசு :

இன்று நீங்கள் சந்திரனின் அருள் பெறுவீர்கள். எனவே உங்களுக்கு பல யோக பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதிக ஆற்றலுடனும் செயல்படுவதோடு, உங்கள் வேலையில் கவனம் செலுத்தி வேலையை செய்து முடிப்பீர்கள்.

உங்கள் கடின உழைப்பு காரணமாக பல வெற்றிகளைப் பெறுவீர்கள். இதன் மூலம் நல்ல தன வரவு பெற வாய்ப்புள்ளது. உங்கள் சகாக்கள் உங்களுக்கு உதவக்கூடும். சிலர் வேலை தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. உங்கள் உடன்பிறந்தவரிடமிருந்து சில நல்ல செய்திகள் வரக்கூடும்.

மகரம்

இன்று நீங்கள் குடும்ப விஷயங்களில் மும்முரமாக இருப்பீர்கள். வேலை தொடர்பாக சில முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். குடும்ப உறுப்பினர்களுடன் எந்த விஷயங்களில் விவாதங்களைத் தவிர்க்க வேண்டும்.

விட்டுக் கொடுத்து செல்லாவிட்டால் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டி வரலாம். நாளின் பிற்பகுதியில் அனைத்து விஷயங்களும் உங்களின் கட்டுப்பாட்டில் வரும். வியாபாரத்தில் முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசித்து முடிவெடுப்பது அவசியம்.

கும்பம்

சிக்கலான சூழ்நிலைகள் இப்போது உங்கள் கட்டுப்பாட்டில் வரும், மன அமைதியை உணரலாம். செலவு மற்றும் வருவாயில் நீங்கள் சரியான சமநிலையை கடைப்பிடிக்க முடியும், இது உங்கள் நிதி நிலைமை அதிகரிக்கக்கூடும்.

அதிக பயணம் அல்லது அதிக வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடும். மாணவர்கள் தங்கள் பாடத்தை திட்டமிட்டு படிப்பீர்கள். காதலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிக்கக்கூடும்.

மீனம்:

இன்று உங்கள் வேலையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிகச் சிறப்பானதாகச் செல்லக் கூடும். மாலையில் சில இடங்களிலிருந்து உங்களுக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும்.

இன்று நீங்கள் மந்தமாக உணரலாம், இனம் புரியாத சில பயம் உங்களை வருத்தம் தரக்கூடும். மன அழுத்தம் உங்கள் தூக்கத்தை பாதிக்கும். தியானம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே