பணியின்போது உயிரிழந்த செவிலியருக்கு 5 லட்சம் நிவாரணம்! முதல்வர் அறிவிப்பு!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த போது உயிரிழந்த செவிலியரின் குடும்பத்திற்கு நிவாரணமாக 5 லட்சம் வழங்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேலும் முன்னேறி ரிசானாவின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார் தன்னலம் கருதாமல் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லாவின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 27ம் தேதி ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரோனா வைரஸ் தடுப்பு பிரிவில் சேவையில் ஈடுபட்டிருந்த செவிலியரின் ஜான் மேரி பிரிசில்லா உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதற்காக தற்போது நிவாரணத்தை அளித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

Related Tags :

TN-Govt | Corona

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே