இந்த நாள் ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் நீங்கா இடம் பிடிக்கும் என்று பிரதமர் மோடி பெருமிதம் பொங்கத் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் புதனன்று நடைபெற்ற ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை புதன் இரவு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட அவர், ‘அயோத்தியில் ஓர் ஆசிர்வதிக்கப்பட்ட தினம்.
இந்த நாள் ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் நீங்கா இடம் பிடிக்கும்’ என்று பதிவிட்டுள்ளார்.