சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.792 உயர்ந்து ரூ.42,408க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல, ஒரு கிராமுக்கு ரூ.99 உயர்ந்து ரூ. 5,301-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.4,600 உயர்ந்துள்ளது.
நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.41,664க்கு விற்பனையானது. மேலும், கடந்த ஒரு வாரமாக சற்று குறைத்து காணப்பட்ட விலை நேற்று முதல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தற்போது 42,000 த்தை கடந்துள்ளது. கொரோனா காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், கல்யாணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க முடியுமா என்ற நிலை தற்பொழுது ஏற்பட்டள்ளது.