கொரோனா வார்டில் இளைஞருக்காக படுக்கையை விட்டுக்கொடுத்து உயிர்நீத்த முதியவர்..!!

இளம் வயது கொரோனா நோயாளிக்கு மருத்துவமனையில் தன்னுடையை படுக்கையை வழங்கி விட்டு, மருத்துவமனையில் இருந்து வெளியேறிய முதியவர் நாராயன் தபோல்கர் நாக்பூரிலுள்ள தன் வீட்டில் அமைதியாக மரணமடைந்தார்.

மகாராஸ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த முதியவர் நாராயண் தபோல்கர். தற்போது, 85 வயதான இவருக்கு கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி கொரோனா தொற்று பாதித்தது-.தொடர்ந்து நாக்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான இந்திராகாந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, விபத்து வார்டில் வைத்து அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. ஆக்சிஜன் லெவலும் தபோல்கருக்கு குறைந்து கொண்டே இருந்தது.

இந்த நிலையில், பெண் ஒருவர் தன் 40 வயது கணவருடன் அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துள்ளார். ஆனால், விபத்து வார்டில் படுக்கை இல்லை. இதை, கவனித்த நாராயண் தபோல்கர் உடனடியாக தனது பெட்டை இள வயது நோயாளிக்கு வழங்குமாறு கூறி விட்டு மருத்துவமனையை விட்டு வெளியேறினார். ‘ தாங்கள் வீட்டுக்கு செல்வது நல்லதல்ல , இங்கே சிகிச்சையில் இருங்கள்’ என்று மருத்துவர்கள் வலியுறுத்தியும் நாராயண் தபோல்கர் கேட்கவில்லை.

மருத்துவர்களின் அறிவுரையை மீறி அவர் வெளியேறியதாக சொல்லப்படுகிறது. அதே வேளையில், எந்த நோயாளியும் குறிப்பிட்ட ஒருவருக்காக படுக்கையை கொடுக்க கூறினாலும், அவ்வாறு கொடுத்து விட முடியாது. எனினும், நாராயண் தபோல்கர் விட்டுக் கொடுத்ததால், மற்றோரு இளவயது நோயாளிக்கு சிகிச்சை கொடுக்க முடியும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

மருத்துவமனையில் இருந்து வெளியேறி தன் உறவினர்களுடன் இருந்த நாராயண் தபோல்கர் 3 நாள்களுக்கு பிறகு அமைதியாக மரணமடைந்தார். இது குறித்து நாராயன் தபோல்களின் மகள் அஷ்லவாரி கோத்வானி , கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தந்தைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. வீட்டிலேயே சிசிச்சையில் இருந்தார். ஏப்ரல் 22- ஆம் தேதி, உடல் நிலை மோசமாடைந்தால் கடும் முயற்சிக்கு பிறகே மருத்துவமனையில் இடம் கிடைத்து சிகிச்சைக்கு அனுமதித்தோம்.

ஆனால், அனுமதித்த சில மணி நேரங்களில் வீடு திரும்பி விட்டார். விசாரித்த போது, உண்மை தெரிய வந்தது. என் தந்தை, இளவயது நோயாளி ஒருவருக்கு படுக்கையை விட்டுகொடுத்து விட்டு வந்துள்ளார். நான் வாழ்ந்து விட்டேன். வாழ வேண்டியவர்கள் வாழ வேண்டும் என்று கூறினார். உயிர் போகும் தருவாயில் என் தந்தையின் நகங்கள் கருத்து விட்டன. உணர்ச்சியற்ற நிலையில் மரணித்தார். ஆனால், வாழ்க்கையில் கடைசிக்கட்டத்தில் உறவினர்கள் மத்தியில் இருந்ததற்காக சந்தோஷமடைந்தார் ”என்று தெரிவித்தார்.

மகராஸ்டிர மாநிலம் புள்ளியல் துறையில் பணி புரிந்த நாராயண் தபோல்கர் ஆர்.எஸ். எஸ் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டவர். சமூக நலப்பணிகளின் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட நாராயண் தபோல்கர் தன் வார்நாளின் இறுதியிலும் சேவை புரிந்து கொண்டே மரணித்துள்ளார் என்று பாராட்டப்பட்டு வருகிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே