ஊரடங்கின் முதல் ஆண்டு…. கடந்தாண்டின் இதேநாளை மறக்க முடியுமா?

கொரோனா காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இன்றோடு ஓராண்டு நிறைவடைந்துள்ளது.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் உருவானதாக சொல்லப்படும் கொரோனா வைரஸ் 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் இருந்து உலக நாடுகளை ஒருகை பார்க்க தொடங்கியது. இந்தியாவில் பிப்ரவரி இறுதியில் பரவியதாக அறியப்பட்டு மார்ச் மாதத்தில் தனது கொடூரத்தை காட்ட தொடங்கியது.

இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் பொருளாதார இழப்புகளும் ஏராளம். ஓராண்டாகியும் எதிலும் மீளமுடியாமல் மக்கள் தவித்து வருவது தான் கொடுமையின் உச்சம். இதனையடுத்து ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

அதன்படி கொரோனாவை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், எனவே மார்ச் 22 ஆம் தேதி அனைவரும் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். நோயின் விபரீதத்தை உணர்ந்த நாட்டு மக்களும் முழு ஒத்துழைப்பு அளித்தனர்.

ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக நோயின் தாக்குதல் தீவிரமாக மார்ச் 24 முதல் மே 1 ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தி மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் நிச்சயம் நம்மால் மறக்க முடியாத வரலாறாக மாறிவிட்டது என்பதே உண்மை.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே