கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை – எல்.கே.சுதீஷ்

2011 தேர்தலில் நாம் அதிமுக கூட்டணியில் இல்லை என்றால் இன்று அதிமுக என்ற கட்சியே தெரிந்திருக்காது என தேமுதிக சுதீஷ் தெரிவித்துள்ளார்.

தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், 2011 தேர்தலில் நாம் அதிமுக கூட்டணியில் இல்லை என்றால் இன்று அதிமுக என்ற கட்சியே தெரிந்திருக்காது என பேசிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், கூட்டணிக்காக அவர்களை தேடி நாம் செல்லவில்லை, அவர்கள்தான் நம்மை தேடி வந்து கொண்டியிருக்கிறார்கள் என பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

10.5% இடஒதுக்கீடு கொடுத்தால் வன்னியர்கள் வாக்களிப்பார்கள் என்று அதிமுக நினைக்கிறது, ஆனால் மற்ற சாதியினர் நிலை என்ன என்று நினைத்து பார்க்கவில்லை என்று எல்.கே.சுதீஷ் பேசியுள்ளார்.

இதனிடையே 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்றது. 

அதில், பல தேமுதிக எம்எல்ஏக்கள் கட்சி மாறி சென்றுவிட்டனர்.

2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக 104 தொகுதிகளில் போட்டியிட்டது.

அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்தது. அதுபோல, 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் தேமுதிக தோல்வியைச் சந்தித்தது என்பது குறிப்பிடப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே