தஞ்சை : கண்டியூர் அருகே தனியார் பேருந்தில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி..!!

தஞ்சை மாவட்டம் கண்டியூர் அருகே தனியார் பேருந்தில் மின்சாரம் தாக்கியதில் பயணிகள் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், கல்லணையில் இருந்து மன்னார்குடி நோக்கி சென்றுகொண்டிருந்த கணநாதன் என்னும் தனியார் நிறுவனப்பேருந்து, திருவையாறு அருகே உள்ள வரகூர் கிராமத்திற்கு வந்தபோது சாலையோரமாக இருந்த மணலில் அமுங்கி, அதற்கு அருகில் இருந்த மின்கம்பி மீது மோதியது.

இதனால் பேருந்தில் படியில் இருந்து பயணம் செய்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நடுக்காவேரி போலீசார், வழக்குப்பதிவு செய்து, விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும், இந்த விபத்தில் காயமடைந்த 10 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே