இது ஆண்களுக்கு மட்டும்.. அந்த இடத்தில் அதிகமாக வியர்க்கிறதா??.. தீர்வு இதோ…

அந்தரங்கப் பகுதியைச் சுற்றி வியர்ப்பது என்பது ஒரு பொதுவான இயற்கை நிகழ்வு.

பல ஆண்களுக்கு அதுவும் கோடை காலம் வந்துவிட்டால் பாடாய் படுத்தி எடுக்கும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று.

அந்தரங்க பகுதியில் அதிக வியர்வை ஏற்படுவதால், அரிப்பு முதல் தீவிர அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதனை ஆண்களே ஆண்களுடன் பகிர்ந்து கொள்ள கூச்சப்படுவார்கள்.

ஆனால், இந்த பிரச்சனையை எளிமையான முறைகளை பின்பற்றினாலே சரி செய்து விடலாம்.

அதற்க்கான வழிமுறைகள் என்ன..?

அதனை எவ்வாறு கடைபிடிப்பது என்பதை இங்கே தெளிவாக பார்ப்போம்.

டால்கம் பவுடர்

எப்போதும் குளித்த பின் காட்டன் துணியால் அந்தரங்க பகுதியில் உள்ள ஈரத்தை தவறாமல் துடைக்குமாறு ஆரோக்கிய நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

அதன் பின் அந்த பகுதியில் வியர்க்காமல் இருப்பதற்கு டால்கம் பவுடரை லேசாக அப்பகுதியில் பயன்படுத்தவும் கூறுகின்றனர்.

பொடுகு எதிர்ப்பு ஷாம்பு

அந்தரங்க பகுதியில் அதிகமான வியர்வையை சந்திக்கும் ஆண்கள், அந்த பகுதியில் வீசும் துர்நாற்றத்தைத் தவிர்க்க பொடுகு எதிர்ப்பு ஷாம்புக்களைக் கொண்டு, அந்தரங்க பகுதியைக் கழுவலாம்.

இதனால் அந்தரங்க பகுதியில் ஈஸ்ட் தொற்றுக்கள் தடுக்கப்படும்.

உடுத்தும் உடை

இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு முழு முதல் காரணம் நீங்கள் உடுத்தும் உடை தான் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

கற்றோட்டமான உடைகளை அணிவதன் மூலம் இந்த பிரச்சனையை சரி செய்யலாம். காட்டன் துணிகளை பயன்படுத்துவது இன்னும் சிறப்பு.

தண்ணீர் குடிக்கவும்

துர்நாற்றத்தை உண்டாக்கும் நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்ற நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

அதிலும் கோடைக்காலத்தில் நீரை அதிகம் குடித்தால், உடல் வறட்சி தடுக்கப்பட்டு, நச்சுக்கள் நீங்கி உடல் துர்நாற்றமும் தடுக்கப்படும்.

பவுடர் (Talcum Powders)

குளித்து முடித்த பின்பு அந்த இடத்தில் துளி ஈரம் இல்லாத அளவுக்கு நன்கு துடைத்து விட வேண்டும்.

பிறகு அந்த இடத்தில் முகத்திற்கு பூசும் டால்கம் பவுடரை பயன்படுத்தினால் வியர்வை கட்டுக்குள் வரும்.

பூஞ்சை எதிர்ப்பு பவுடர்கள் (Anti-fungal powders)

வியர்வையால் துர்நாற்றம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

இப்படியான பிரச்சனையில் இருப்பவர்கள். மருத்துவரை சந்தித்து பூஞ்சை எதிர்ப்பு பவுடர்களை வாங்கு பயன்படுத்தினால் வியர்வை மற்றும் வியர்வையால் ஏற்படும் துர்நாற்றம் அறவே ஒழிந்து விடும்.

ஆன்டி-பாக்டிரியல் வாஷ் (Anti-Bacterial wash)

சமீப காலமாக ஆன்டி-பாக்டீரியல் வாஷிங் லிக்விட்கள் கடைகளில் அதிகம் கிடைக்கின்றன.

சாதரணமாக பயன்படுத்தும் சோப்புகளை விட இந்த வகை ஆன்டி-பாக்டீரியல் வாஷ்களை பயன்படுத்தி தொடை இடுக்கு மற்றும் அந்தரங்க பகுதியை சுற்றி தேய்த்து குளித்தால் உடனடியாக பலன்கள் கிடைக்கும்.

உள்ளாடையில் கவனம் ( Inner Wear )

அணியும் உள்ளாடையில் கவனம் அவசியம்.

அந்தரங்க பகுதியை இறுக்கமாக அழுத்திக்கொண்டிருப்பது போன்ற உள்ளாடைகளை தவிர்த்து விடுங்கள்.

மேலும், வெளியில் செல்லும் நேரம் தவிர வீட்டில் இருக்கும் போது உள்ளாடைகளை தவிர்த்து விடுதல் சிறப்பு.

இரவு நேரங்களில் கட்டாயம் உள்ளாடையை கழட்டி விடுவது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

ஒரே உள்ளாடையை இரண்டு அல்லது அதற்கு மேலான நாட்களுக்கு பயன்படுத்துவது உங்கள் உடல் நலனுக்கு நீங்களே வைத்துக்கொள்ளும் வேட்டு.

இயற்கை வைத்தியம் ( Natural Remedy )

அந்தரங்க பகுதியில் அதிக வியர்வை பிரச்சனை இருந்தால் மூணு டேபிள் ஸ்பூன் வெள்ளை வினிகரை ஒரு கப் நீரில் கலந்து, சுத்தமான காட்டன் துணியை அந்நீரில் நனைத்து, அந்தரங்க பகுதியைச் சுற்றி மிருதுவாக ஒத்தி எடுங்கள்.

இதனால் அந்தரங்க பகுதியில் வியர்வையால் பாக்டீரியாக்கள் பெருகுவது தடுக்கப்பட்டு சுத்தமாக வும், துர்நாற்றம் வீசாமலும் இருக்கும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே