ட்விட்டர் சேவையில் திடீர் பாதிப்பு..!!

ட்விட்டர் இணையதளத்தில் சர்வர் பிரச்சினை காரணமாக உலகளவில் ட்விட்டர் இணையதளம் முடங்கியுள்ளதாகல் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ட்விட்டர் இணையதளத்தில் இன்று காலை முதலே ட்வீட்களை போஸ்ட் செய்வதிலும் டைம்லைன் தகவல்களைப் பார்ப்பதிலும் ட்விட்டர் இணையத்திற்குள் பயனாளர்கள் நுழைவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் இணையதளத்தின் சர்வர் செயலிழப்பு காரணமாக 40- ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ட்விட்டர் இணையத்தில் தகவல்களை போஸ்ட் செய்தால் ‘Something Went Wrong. Try again எனவும் அல்லது ‘Tweet aren’t loading right now’ என தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ட்விட்டர் டீம், “ட்விட்டரில் தகவல்களை போஸ்ட் செய்வதில் பிரச்சினை உள்ளது. இதனை நாங்கள் சரி செய்து வருகிறோம்.

நீங்கள் உங்கள் ட்விட்டர் கணக்கை விரைவில் பயன்படுத்த முடியும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் இணையத்தில் பாதிப்பு குறித்து டவுன்டெக்டர் வெளியிட்டு தகவலில் ட்விட்டர் இணையத்தை பயன்படுத்துவதில் சிக்கல் குறித்து இதுவரை 81- ஆயிரம் பேர் புகார் தெரிவித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே