கோபம் ஆண்களின் பிறவி குணம் என்பார்கள். இந்த பிறவி குணத்தால் மன அழுத்தம் அதிகரிக்கிறது.

மன அழுத்தம் அதிகரிப்பதால் உடலில் தேவையற்ற உடல்நலக் குறைபாடுகள் மற்றும் கோளாறுகள் ஏற்படுகின்றன.

கோபம் நல்ல உறவுகளை மட்டுமின்றி, உங்கள் உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கும் ஓர் செயலாகும்.

மன அழுத்தம் மூலமாக அதிகரிக்கும் கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.

டிப்ஸ் #1

பல்லை கடிக்கும் அளவு கோபம் அதிகரிக்கும் முன்பே அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிடுங்கள். வெளியில் சென்று கொஞ்ச நேரம் நடந்து வாருங்கள்.

அந்த சூழல் மற்றும் கோபத்தை அதிகரிக்கும் நபரின் முன் இருந்து நகர்ந்துவிடுவது கோபத்தோடு சேர்த்து உங்கள் மன அழுத்தத்தையும் குறைக்கும்.

டிப்ஸ் #2

மூச்சை நன்கு இழுத்து விடுங்கள். மூச்சை உள் இழுத்துபிடித்து, ஓரிரு வினாடிகள் கழித்து விடுங்கள்.

இவ்வாறு செய்வது உங்களை ரிலாக்ஸாக உணர உதவும். இவ்வாறு ஓரிரு நிமிடங்கள் செய்வது உங்கள் உடலுக்கு அதிகமான ஆக்ஸிஜென் கிடைக்க செய்கிறது.

டிப்ஸ் #3

ஒரு பாட்டில் நீரை பருகுங்கள். இது உடலில் நீர் வறட்சி ஏற்படாமல் காக்கும்.

நீங்கள் கோபப்படும் போது உடலில் நீர்வறட்சி ஏற்படுவது சரியானது அல்ல என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

டிப்ஸ் #4

நடைபயிற்சி (அ) ஓட்டப்பயிற்சி செய்யுங்கள். அலுவலகத்தில் இருப்பவர்கள் நடைபயிற்சி தான் செய்ய முடியும்.

இது உங்கள் உடலில் இருந்து எண்டோர்பின் வெளிப்பட செய்கிறது. இது உங்கள் கோபத்தை குறைத்து நன்றாக உணர வைக்க உதவுகிறது.

டிப்ஸ் #5

கண்களை மூடி உங்கள் கவனத்தை வேறொரு செயலில் குவிக்க தொடங்குங்கள். இதனால், உங்கள் மனதை வேறுபாதையில் கட்டுப்படுத்தி கோபத்தை குறைக்க முடியும்.

டிப்ஸ் #6

இதுவும் ஒரு வைத்தியம் தான், சிரிப்பது. நீங்கள் கோபப்படும் போது சிரிப்பது, உங்கள் மனநிலையை உடனடியாக மாற்ற உதவும்.

சின்ன சின்ன விஷயங்களுக்கு கோபம் ஏற்படும் போது இது நல்ல பயனளிக்கும். உங்கள் மனநிலையை கோபத்தில் இருந்து வேறுபக்கம் மாற்ற இது நல்ல தீர்வளிக்கிறது.

டிப்ஸ் #7

தனியாக எங்காவது சென்றுவிடுங்கள். தனிமை தான் கோபத்தை கட்டுப்படுத்த சிறந்த மருந்து.

தனிமையில் சென்றும் அதே சூழலை பற்றி நினைப்பது தவறு. உங்களுக்கு பிடித்த விஷயங்கள் அல்லது நபர்கள் பற்றி எண்ண தொடங்குங்கள்.

டிப்ஸ் #8

இசை (அ) பாடல்கள் கேட்க துவங்குங்கள். இது விரைவாக உங்கள் மனநிலையை மாற்ற உதவும் ஓர் செயலாகும். உங்களுக்கு பிடித்த பாடல்கள் கேட்பது உங்கள் மனநிலையை உடனடியாக மேலோங்க வைக்கிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே