வெளிநாடுகளில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்கும் சீரம்..!!

சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா இந்தியாவுக்கு வெளியே தடுப்பூசி உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளார்.

உலக நாடுகள் முழுவதும் தற்போது கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்ற நிலையில், இந்தியாவில், அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அஸ்ட்ரா ஜெனேகா கொரோனா தடுப்பூசியை சிரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா தயாரிக்கிறது.

இந்நிலையில்,சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா, அடுத்த சில நாட்களில் ஒரு அறிவிப்பு வரப்போகிறது என்று வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார்.

மேலும் அவர் கூறுகையில், ரம் நிறுவனம் தனது மாத உற்பத்தியை ஜூலை மாதத்திற்குள் 100 மில்லியன் அளவுகளாக உயர்த்த முடியும் என்றும்; சீரம் இன்ஸ்டிடியூட்டின் உற்பத்தித் திறனை ஆறு மாதங்களுக்குள் ஆண்டுக்கு 2.5 பில்லியனிலிருந்து 3 பில்லியன் டோஸாக உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, பிற நாடுகளில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், எட்டு நாட்களுக்கு முன்பு பிரிட்டன் இந்தியாவில் இருந்து பயணிகளைத் தடை செய்வதற்கு முன்பு அவர் லண்டனுக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே