செப்.13ல் நடைபெற்ற நீட் தேர்வுக்கான விடைகள் வெளியீடு..!!

நீட் தேர்வுக்கான விடைக்குறிப்புகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

MBBS, BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு கடந்த 13-ம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது.

நாடு முழுவதும் 3,842 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை 14.37 லட்சம் பேர் எழுதினர்.

இந்நிலையில் தேர்வுக்கான விடைக்குறிப்புகளை தற்போது தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

www.ntaneet.nic.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விடைக்குறிப்புகளுடன், தேர்வர்கள் தாங்கள் எழுதிய விடைகளை சரிபார்த்துக் கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

மேலும் நீட் தேர்வுக்கான முடிவுகள் வரும் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே