பள்ளி மாணவர் சேர்க்கையின்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியீடு

சீனாவின் நகரில் கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் 210 அதிகமான நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று பரவலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் திறப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை அரசு பள்ளிகளில் மேற்கொள்ளலாம் என பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

அதன்படி, அரசு பள்ளிகளில் 1, 6, 9 வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வரும் திங்கட்கிழமை முதல் நடைபெறும் எனவும்; 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான, மாணவர் சேர்க்கை வரும் 24-ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும்; சமூக இடைவெளியை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.

மேலும், தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி மாணவர் சேர்க்கையை இணையதளம் மூலம் நடத்த வேண்டும் என்றும்; மாணவர்கள் பள்ளியை விட்டு வேறு பள்ளிக்கு மாறுவோரும் வரும் திங்கள்கிழமை முதல் அதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளலாம் எனவும்; கொரோனா சூழலில் தற்போதைக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பே இல்லை என செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை தொடங்குகிறது.

உரிய ஆவணங்கள் இல்லை என்றாலும் மாணவர்கள் சேர்க்கையை பள்ளிகள் மேற்கொள்ளவேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், மாணவர் சேர்க்கை நடைபெறும் நாளிலேயே புத்தகங்கள், புத்தகப்பை உள்ளிட்ட பொருட்களை வழங்க வேண்டும்.

ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை. மாணவர் சேர்க்கை குறித்த தகவலை முன்கூட்டியே பெற்றோர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே