நாளை நடக்க இருந்த CA அடிப்படை தேர்வு ஒத்திவைப்பு..!!

நாளை(டிச.8) நடைபெறவிருந்த சி.ஏ. தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் அறிவித்துள்ளது.

டிசம்பர் 8 ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை சி.ஏ. பவுண்டேஷன் தேர்வு தாள் – 1 நடைபெற இருந்தது.

இந்நிலையில் இது வருகிற 13 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 13 ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெறும்.

ஏற்கெனவே பதிவிறக்கம் செய்த நுழைவுச் சீட்டுகளை பயன்படுத்தி அதே தேர்வு மையங்களில் தேர்வர்கள் தேர்வினை எழுதலாம்.

தவிர்க்க முடியாத சில காரணங்களால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே