விதிமீறலில் ஈடுபட்டதற்கு அபராதம் செலுத்தாமல் காவலருக்கு பெண் ஒருவர் முத்தமிட்ட காட்சி இணையத்தில் வைரலாகிறது.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவின் தலைநகராக லிமா உள்ளது.
இங்கு கொரோனாவின் தாக்கம் அதிகளவில் உள்ளதால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இளம்பெண் ஒருவர் தடையை மீறி காரில் சென்றுள்ளார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விதி மீறலில் ஈடுபட்டதற்காக அபராதம் விதித்துள்ளார்.
ஆனால், அந்த பெண் அபராதத்திற்கு பதிலாக முத்தம் தருவதாக கூறியுள்ளார்.
சிறிது நேரத்தில் இருவரும் முத்தத்தை பரிமாறிக் கொள்கின்றனர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.
இதையடுத்து, அந்நகரின் மேயர் லூயிஸ் மோலினா உடனடியாக அந்த அதிகாரியை பணியிட நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

