சாரட் வண்டியில் வந்த பாஜக மாநில தலைவர் முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு..!!

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி பாஜக மாநில தலைவர் எல். முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்ட்டுள்ளது.

பிரதமர் மோடியின் 70வது பிறந்தநாளையொட்டி நேற்று முன்தினம் சென்னையில் தமிழக பாஜக சார்பில் கட்சியின் தலைவர் எல். முருகன் சென்னை திநகரில் 70 அடிக்கு கேக் வெட்டியதுடன் சாரட் வண்டியில் ஊர்வலமாக சென்றார்.

இந்நிலையில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் அனுமதியின்றி சாரட் வண்டியில் சென்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பாஜக மாநில தலைவர் எல். முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன், மாவட்ட தலைவர் சந்துரு உள்ளிட்ட 6 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அத்துடன் தடையை மீறி தி.நகர் பகுதியில் பேனர் வைத்ததாகவும் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது .

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே