விவசாயிகள் மத்திய அரசுடன் இன்று நடத்த உள்ள பேச்சுவார்த்தையே இறுதியானதாகும் என்று தெரிவித்துள்ளனர்.

வரும் 19ம் தேதி உச்சநீதிமன்றம் அமைத்த குழு தன் முதல்கூட்டத்தைக் கூட்ட உள்ள நிலையில் அரசுடன் விவசாயிகள் நடத்தும் கடைசிப் பேச்சுவார்த்தை இது.

அதிக நம்பிக்கை இல்லாமல் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துக் கொள்ளப் போவதாகவும் விவசாயிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த எட்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் விவசாயிகளின் கோரிக்கையான வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது.

உச்சநீதிமன்றம் நியமித்த குழுவில் இருந்து பாரதிய கிஸான் யூனியன் தலைவர் பூபேந்தர் சிங் திடீரென விலகி விட்டார். தாம் எப்போதும் விவசாயிகளின் பக்கம் நிற்கவே விரும்புவதாக பூபேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே