வீரமரணமடைந்த ராணுவ வீரர் பழனி குடும்பத்துக்கு 20 லட்சம் நிவாரணம்…!!!முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

சீன எல்லையில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் பழனி குடும்பத்துக்கு ₹20 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

22 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி ,தனது உயிரையும் ஈந்துள்ள தமிழகத்தில் உள்ள இராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி உயிரிழந்தார்.

இவர் மரணத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ,திமுக தலைவர் ஸ்டாலின் ,டி.டி.வி தினகரன் ,கமல்ஹாசன் உள்ளிட்டோர் தனது இரங்கல்களை தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து இந்திய – சீன எல்லையில் இருதரப்பிற்கு இடையே நடந்த மோதலில் உயிரிழந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு 20 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே