நாடு முழுவதும் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 236-ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் நேற்றை தினம் வரை 223 பேருக்கு ஒமிக்ரான் வகை தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 236ஆக உயர்ந்துள்ளது. ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 104 பேர் குணமடைந்துள்ளனர்.
இதுவரை 16 மாநிலங்களில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒமிக்ரான் தொற்று பரவலை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசு தரப்பில் இருந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிது. ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்க தொடங்கிவிட்டன.